பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :20 மே 2021, 12:19 pm

DIN

கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்து தட்டுப்பாடு தொடர்பாக தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இவ்வழக்கு இன்றைக்கு விசாரணைக்கு வந்தபோது, கரோனா பரிசோதனை முடிவுகளை விரைந்து தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முடிவுகளை விரைந்து தெரிவிப்பதால், பரவலையும் விரைந்து கட்டுப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் தடுப்பூசி, மருந்து ஒதுக்கீடு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கும் உத்தரவு பிறப்பத்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.