கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 23) மிதமான மழை பெய்யக்கூடும்


வெப்பச்சலனம் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 23) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:
வெப்பச்சலனம் காரணமாக, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், தேனி, கோயம்புத்தூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை( மே 23) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 24: மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் திங்கள்கிழமை (மே 24) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 25: கன்னியாகுமரி, தேனி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (மே 25) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 26: மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 26-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
வெப்பநிலை உயரக்கூடும்: மத்திய வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகவுள்ளது. இதன் காரணமாக, தமிழக பகுதிகளில் தரைக்காற்று மேற்கு-வடமேற்கு திசையிலிருந்து வீச வாய்ப்பிருப்பதால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மே 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை வட வானிலை நிலவும். வட தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை இரண்டிலிருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
தென்மேற்கு பருவமழை: தென்மேற்கு பருவமழை மேலும் தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சிறிது தொலைவு வரை தீவிரமடைந்துள்ளது. அந்தமான் தீவுகளில் முழுமையாக தீவிரமடைந்துள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டுவில் 90 மி.மீ., விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 60 மி.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூா்பேட்டையில் தலா
50 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாா், திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூா் அணைக்கட்டு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, காஞ்சிபுரத்தில் தலா 40 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கம், திருப்பத்தூா் மாவட்டம் வடபுதுப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூா், கள்ளக்குறிச்சி மாவட்டம் வேங்கூா், ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 23) மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் வீசக்கூடும். தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி, மன்னாா்வளைகுடா, தெற்கு வங்கக் கடல் பகுதிகளில்
மே 24 முதல் மே 26-ஆம் தேதி வரை, மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், மத்திய வங்கக் கடல், வடக்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...