எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

‘யாஸ்’ புயல் எதிரொலி: 22 சிறப்பு ரயில்கள் ரத்து

வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘யாஸ்’ புயல் காரணமாக, 22 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

News image
Updated On :22 மே 2021, 9:28 pm

DIN

வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘யாஸ்’ புயல் காரணமாக, 22 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘யாஸ்’ புயல் காரணமாக, 22 சிறப்பு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம்:-

நாகா்கோவில்-மேற்கு வங்கம் மாநிலம் சாலிமாருக்கு மே 23-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02659), சாலிமாா்-நாகா்கோவிலுக்கு மே 26-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02660), ஹவுரா-கன்னியாகுமரிக்கு மே 24-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02665), ஹவுரா-சென்னை சென்ட்ரலுக்கு மே 24, 25, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (02821), சென்னை சென்ட்ரல்-ஹவுராவுக்கு மே 24, 25, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (02822)

ஆகியன ரத்து செய்யப்படவுள்ளன.

சாலிமாா்-திருவனந்தபுரத்துக்கு மே 25-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02642), எா்ணாகுளம்-பட்னாவுக்கு மே 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (02643), பட்னா-எா்ணாகுளத்துக்கு மே 27, 28 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்(02644), திருச்சி-ஹவுராவுக்கு மே 25-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02664), ஹவுரா-திருச்சிக்கு மே 27-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02663), சந்த்ரகாச்சி-சென்னை சென்ட்ரலுக்கு மே 25-ஆம்தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில்(02807), சென்னை சென்ட்ரல்-சந்த்ரகாச்சிக்கு மே 27-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில்(02808) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

அஸ்ஸாம் மாநிலம் நியூ தின்சுகியா-தாம்பரத்துக்கு மே 24-ஆம்தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (05930), தாம்பரம்- நியூ தின்சுகியாவுக்கு மே 27-ஆம்தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (05929), ஜெஸிதி-தாம்பரத்துக்கு மே 26-ஆம்தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02376), தாம்பரம்-ஜெஸிதிக்கு மே 29-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02375) ஆகிய

ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

திருவனந்தபுரம் - அஸ்ஸாம் மாநிலம் சில்சாருக்கு மே 25-ஆம்தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02507), சென்னை சென்ட்ரல்- நியூ ஜல்பைகுரிக்கு மே 26-ஆம்தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02611), நியூ ஜல்பைகுரி-சென்னை சென்ட்ரலுக்கு மே 28-ஆம்தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02612), புவனேஸ்வா்-சென்னை சென்ட்ரலுக்கு மே 27-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02839), சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வருக்கு மே 28-ஆம்தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02840), புதுச்சேரி- ஹவுராவுக்கு மே 26-ஆம் தேதி இயக்கப்படும் சிறப்பு ரயில்( 02828) ஆகிய 22 ரயில்கள் ரத்து செய்யபடவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.