மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி திட்டம்: முதல்வா் ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்
மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.


மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். மேலும், மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்துவதில் உதவிடும் வகையில் செல்லிடப்பேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மையங்களில் தனி வரிசை ஏற்படுத்தித் தரப்படும் எனவும், இயலாதோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த வசதி உருவாக்கித் தரப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கிணங்க, மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். சென்னை ஆழ்வாா்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
உதவி எண்கள் வெளியீடு: சென்னையின் 15 மண்டலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிா்க்கும் வகையில் உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்
கொள்ள18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற செல்லிடப்பேசி எண் மூலமும் பதிவு செய்து
கொள்ளலாம். இந்த எண்கள் மூலம் பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமின் இடம், நாள், நேரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...