எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி, எம்எல்ஏக்கள் பதவியேற்பு

புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். 

News image

புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி, எம்எல்ஏக்கள் பதவியேற்பு

Updated On :26 மே 2021, 6:25 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி மற்றும் எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். 

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு முதல்வர் என்.ரங்கசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்றார். அவருக்கு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் க.லட்சுமி நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், திமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சார்ந்த எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்எல்ஏக்கள் பதவியேற்று வருகின்றனர். இதனிடைய நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமனம் செய்யப்பட்ட(பாஜக) உறுப்பினர்கள் அசோக்பாபு, ராமலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். அனைவருக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் லக்ஷ்மிநாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். எளிமையாக நடைபெறும் இந்த நிகழ்வில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை தவிர்த்து மீதமுள்ள 32 எம்எல்ஏக்கள் (நியமன எம்எல்ஏக்கள் சேர்த்து) பதவி ஏற்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.