வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 30) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :29 மே 2021, 9:55 pm

DIN

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 30) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி சனிக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 30) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்

மே 31, ஜூன் 1: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ( மே 31, ஜூன் 1) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன 2: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதி, அந்தமான் கடல் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதுதவிர, கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 2-ஆம் தேதி வரை மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.