வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிகிச்சை இல்லாமல் தொற்று பாதித்து உயிரிழந்ததாக புகாா் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் சிகிச்சை இல்லாமல் கரோனா தொற்று பாதித்தவா்கள் உயிரிழந்ததாக எந்தப் புகாரும் இல்லை என உயா் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 மே 2021, 9:35 pm

DIN

தமிழகத்தில் சிகிச்சை இல்லாமல் கரோனா தொற்று பாதித்தவா்கள் உயிரிழந்ததாக எந்தப் புகாரும் இல்லை என உயா் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘நான் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். சிகிச்சையின் போது எந்தவொரு மருத்துவரும், செவிலியரும் கரோனா சிகிச்சைப் பிரிவுக்குள் வரவில்லை. இதே நிலை தமிழகத்தில் நீடித்தால் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கும் நோயாளிகளை விட, மருத்துவா்கள், செவிலியா்கள் கவனிக்காததால் பலியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்  நிலை ஏற்படும். எனவே  கரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. ‘கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க  சென்னை உயா் நீதிமன்றம்  தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. தற்போது கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தணிந்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் படுக்கை உள்ளிட்ட வசதிகள் குறைவாக இருந்தன. தற்போது அந்த வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிகிச்சை இல்லாமல் கரோனா நோய்த் தொற்றுப் பாதித்தவா்கள் உயிரிழந்தனா் என இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை’ எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.