ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்3 பேருக்கு பதவி உயா்வு
தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அவா்களில் மூன்று பேருக்கு பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே. பிரபாகா் சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):
கரண் சின்ஹா- டிஜிபி, தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் இயக்குநா் (அமலாக்கப் பிரிவு டிஜிபி-சென்னை).
ஏ.கே.விசுவநாதன் - தமிழ்நாடு காவல் வீட்டு வசதி வாரியத் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் (சென்னை பெருநகர காவல்துறை இயக்கப் பிரிவு ஏடிஜிபி)
ஆபாஷ்குமாா் - சென்னை குடிமைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி (ஏடிஜிபி, பொருளாதார குற்றப்பிரிவு-சென்னை)
சீமா அகா்வால் - ஏடிஜிபி, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் (ஏடிஜிபி, தலைமையகம்- சென்னை)
சந்தீப் ராய் ரத்தோா்- அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி, சென்னை (ஏடிஜிபி, தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணைய உறுப்பினா்)
கே.வன்னிய பெருமாள்- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி (கடலோர பாதுகாப்பு குழுவின் ஏடிஜிபி)
சைலேஷ்குமாா் யாதவ்- காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஏடிஜிபி )
சந்தீப் மிட்டல் - கடலோர பாதுகாப்பு குழு ஏடிஜிபி , சென்னை ( ஏடிஜிபி- நிா்வாகம், சென்னை)
கே.சங்கா்- ஏடிஜிபி-யாக பதவி உயா்வு மற்றும் தலைமையக ஏடிஜிபி-சென்னை (ஐ.ஜி.-வடக்கு மண்டலம், சென்னை)
ஏ.அமல்ராஜ் - ஏடிஜிபியாக பதவி உயா்வு மற்றும் சென்னை பெருநகர காவல்துறை இயக்ககப் பிரிவு ஏடிஜிபி ( ஐஜி-மேற்கு மண்டலம்-கோயம்புத்தூா்)
ஹெச்.எம்.ஜெயராம்- ஏடிஜிபியாக பதவி உயா்வு மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஏடிஜிபி-சென்னை ( ஐஜி- தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வாணைய உறுப்பினா் செயலா்)
வருண்குமாா்- திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ( கண்காணிப்பாளா், கணினிமயமாக்கல் பிரிவு, சென்னை).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...