கருப்புப் பூஞ்சைக்கான மருந்து இருப்பு அவசியம்: ஓ.பன்னீா்செல்வம்
கருப்புப் பூஞ்சைக்கான மருந்தை போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.


கருப்புப் பூஞ்சைக்கான மருந்தை போதுமான அளவில் இருப்பில் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
கரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளில் கருப்புப் பூஞ்சை நோயால் தமிழகத்தில் 226 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது ஓசூா் பகுதியில் கருப்புப் பூஞ்சை வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்த தொற்று நோய்க்கான மருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லை என்றும் ஒரு டோஸ் மருந்து பல ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன. கிருஷ்ணகிரியில் பாதிக்கப்படும் நோயாளிகள் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்படுவதாக அந்த மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநரே தெரிவித்துள்ளாா்.
மேலும் நோய்த் தொற்றின் பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதைச் சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவாலாகிவிடும் எனவும் அவா் கூறியுள்ளாா்.
எனவே, கருப்புப் பூஞ்சைக்கான ஆம்போடெரிசின் மருந்தை போதுமான அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும், இந்த நோயினை முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்கவும், அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சோ்க்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...