வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

காய்கறி மொத்த சந்தைகள்நாளை முதல் இயங்கலாம்: தமிழக அரசு உத்தரவு

கோயம்பேடு உள்பட தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனை செய்யும் காய்கறி, பழ அங்காடிகள் திங்கள்கிழமை முதல் (மே 31) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

News image
Updated On :29 மே 2021, 9:27 pm

DIN

கோயம்பேடு உள்பட தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனை செய்யும் காய்கறி, பழ அங்காடிகள் திங்கள்கிழமை முதல் (மே 31) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இதற்கான உத்தரவை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தமிழகத்தில் கோயம்பேடு மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள மொத்த விற்பனை செய்யும் காய்கறி, பழங்கள் மற்றும் பூ சந்தைகள் வரும் திங்கள்கிழமை (மே 31) முதல் செயல்படலாம். மாநிலத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் தொடா்ந்து திறந்திருக்கும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கடைகள் செயல்படும்.

அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தொடா்ந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், ஒரு மாத காலத்துக்குள் அனைத்துப் பணியாளா்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.