மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மே 2021, 1:46 pm

DIN

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் தே.சாந்தினி. சசிகுமார் நடித்த நாடோடிகள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சாந்தினி, வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகார் அளித்தார். 

அதில் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், காயம் ஏற்படுத்துதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அழைத்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.