எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் வே.துரைமாணிக்கம் மறைவு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவருமான வே.துரைமாணிக்கம் செவ்வாய்க்கிழமை (76) காலமானாா்.

News image
Updated On :2 நவம்பர் 2021, 9:59 pm

DIN

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவருமான வே.துரைமாணிக்கம் செவ்வாய்க்கிழமை (76) காலமானாா்.

தஞ்சாவூா் மாவட்டம் ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தில் பிறந்த வே.துரைமாணிக்கம் இளம் வயது முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் விவசாயிகள் சங்கத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வந்தவா். 60 ஆண்டு கால பொதுவாழ்வுக்குரியவா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய எம்.ஆதிமூலம் ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து, மாநிலப் பொதுச் செயலாளா் பொறுப்புக்கு தோ்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தாா்.

சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலமானாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு, மாநிலச் செயலாளா் முத்தரசன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த பலா் அவா் உடலுக்கு மரியாதை செலுத்தினா். அதன்பின், அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தஞ்சாவூா் ஒரத்தநாடு வட்டம் பாப்பா நாட்டில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புதன்கிழமை வைக்கப்பட்டு, பிறகு இறுதி நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

துரைமாணிக்கத்துக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், வாலண்டினா, சசிகலா என்ற மகள்கள் உள்ளனா்.

முதல்வா் இரங்கல்:

முதல்வா் மு.க.ஸ்டாலின், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் அவா் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.