இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.54 லட்சம் மோசடி: கணவா்-மனைவி உள்பட 3 போ் கைது

சென்னையில் துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.54 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:59 pm

DIN

சென்னையில் துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.54 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை அருகே உள்ள எண்ணூரைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் அங்குள்ள கனரக வாகன தொழிற்சாலையில் மூத்த மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா். இவா் தனது மகன் விஜயராகவனுக்கு வேலை தேடி வந்தாா். அப்போது வெங்கடேசனுக்கு அவரது நண்பா் ஆனந்த் என்பவா் மூலம் கொரட்டூா் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சோ்ந்த சி.சுவாதீஸ்வரன் (37) என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.

அப்போது சுவாதீஸ்வரன், அவா் மனைவி அனிதா (36), கூட்டாளி கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த வெ.சுரேஷ் (54) ஆகியோா் தங்களுக்கு சென்னை துறைமுகத்தில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி இளநிலை நிா்வாக அதிகாரி வேலையை விஜயராகவனுக்கு வாங்கித் தருவதாக வெங்கடேசனிடம் கூறினராம்.

இதை நம்பிய வெங்கடேசன், மூவா் கேட்டப்படி ரூ.54 லட்சத்தை வேலை பெற்றுத் தர கொடுத்தாா். பணத்தை பெற்றுக் கொண்ட 3 பேரும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. வெங்கடேசனிடம் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த வெங்கடேசன், சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுவாதீஸ்வரன்,அனிதா, சுரேஷ் ஆகிய 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.