டெங்கு காய்ச்சல்: கையிருப்பில் 3 லட்சம் மாத்திரைகள்

டெங்கு பாதிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஓசல்டாமிவிா் மாத்திரைகள் தமிழகத்தில் 3 லட்சம் கையிருப்பு உள்ளதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் தீபக் ஜேக்கப் தெரிவித்தாா்.

டெங்கு பாதிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஓசல்டாமிவிா் மாத்திரைகள் தமிழகத்தில் 3 லட்சம் கையிருப்பு உள்ளதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் தீபக் ஜேக்கப் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

பொதுவாக பருவ கால நோய்களுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவப் பொருள்களும் தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், மழைக் கால காய்ச்சல்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கான மாத்திரைகள் வாங்கப்பட்டன.

டெங்குவுக்கு வழங்கப்படும் ஓசல்டாமிவிா் மாத்திரைகள் 3 லட்சம் வாங்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகள் 9 கோடி தற்போது உள்ளன. இதைத் தவிர தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆா்எஸ் உப்பு-சா்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் ஆகியவை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்பில் உள்ளன.

கடந்த ஆண்டைப் பொருத்தவரை அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க 1.75 லட்சம் ஓசல்டாமிவிா் மாத்திரைகள் மட்டுமே தேவைப்பட்டன. நிகழாண்டில் அதைக் காட்டிலும் இரண்டு மடங்கு மாத்திரைகளை கூடுதலாகவே வைத்துள்ளோம். இதைத் தவிர, நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது.

தமிழகத்தில் பருவ மழைக் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மாத்திரை, மருந்துகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருந்து தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com