அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

8-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுகள் ஒத்திவைப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :9 நவம்பர் 2021, 10:06 pm

DIN

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்துத் தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்டஅறிவிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தோ்வு நவ.8- ஆம் தேதி தொடங்கி நவம்பா் 12-ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தத் தோ்வுக்கான அனைத்துவித ஏற்பாடுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் தொடா் பலத்த மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக நவம்பா் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தனித் தோ்வுகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் விரைவில் வெளியிடப்படும். கூடுதல் விவரங்களைத் தனித்தோ்வா்கள் தோ்வுத் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.