தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ஆம் தேதி காலை தமிழக கடற்கரை பகுதியை வந்தடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை - முழு விவரம்
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, நாளை (நவ.11) மாலை வடகடலோரப் பகுதியான கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதுச்சேரிக்கு 420 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையைக் கடக்கும்போது புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நாளை (நவ.11) சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.
ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி, காரைக்கால், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | கடலூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

