வடசென்னை அனல் மின் நிலையம் நிலை ஒன்றில் மீண்டும் மின் உற்பத்தி

வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 1 – ல் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி 12 மணி நேரத்தில் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை ஒன்றில் மீண்டும் மின் உற்பத்தி
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை ஒன்றில் மீண்டும் மின் உற்பத்தி
Published on
Updated on
2 min read

வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 1 – ல் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மின் உற்பத்தி 12 மணி நேரத்தில் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டம், வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (12.11.2021) காலை அனல் மின் நிலைய தலைமை பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்களுடன், கடும் மழையினால் நிறுத்தி வைக்கப்படிருந்த அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கியது குறித்து ஆய்வு நடத்தினார்கள். இந்த கள ஆய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் நேற்று இரவு (11.11.2021) நடைபெற்றதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இயக்குநர் (உற்பத்தி) உ.பா.எழினி, இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் நேற்று நிலக்கரி இருப்பு தளம் மற்றும் நீர் வெளியேறும் பகுதியிலும் நேரடியாக சென்று ஆய்வு செய்து தொடர்ந்து, அங்கு தேங்கியுள்ள மழை நீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். அதனை தொடர்ந்து பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு மின் உற்பத்தி 12 மணி நேரத்திற்குள் உடனடியாக இன்று (12.11.2021) காலை தொடங்கப்பட்டது.

அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தின் தற்போதைய உட்சபட்ச மின்தேவை 11,000 மெகாவாட்கள். இந்த மின் தேவையினை சொந்த மின் உற்பத்தி மூலம் 3,500 மெகாவாட்டும், மத்திய தொகுப்பிலிருந்து 4,500 மெகாவாட்டும் மற்றும் இதர மின் உற்பத்தி மூலம் 3,000 மெகாவாட் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மின்தேவை 9,000 மெகாவாட் முதல் 11,000 மெகாவாட்டாக உள்ளது.

“தமிழ்நாட்டிலுள்ள அனல் மின் நிலையங்களான வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 1-ன் அலகு 3, வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 2 -ன் அலகு 1, அலகு 2, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் அலகு 2, அலகு 3 மற்றும் அலகு 5, மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை 1-ன் அலகு 2, அலகு 3 மற்றும் அலகு 4, மேட்டூர் அனல் மின் நிலையம் நிலை 2 -ன் அலகு 1 ஆகியவை இயக்கத்தில் உள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, வீசிய காற்றின் வேகம் மற்றும் அதிகபட்ச மழையினாலும் செடி, கொடிகள் வேரோடு சாய்ந்து மழைநீர் வடிகால் கால்வாயை அடைத்தனால், மழைநீர் கால்வாயின் வழியாக வெளியேறுவதில் தடை ஏற்பட்டதாலும் அனல் மின்நிலையத்தின் நிலக்கரி சேமிப்பு தளத்தில் மழைநீர் 2 அடிக்கும் மேலாக தேங்கியதினாலும், நிலக்கரியை கையாளுவதில் ஏற்பட்ட தடையினாலும் மற்றும் பலத்த காற்று வீசுவதால் கப்பலில் இருந்து நேரடியாக நிலக்கரியை இறக்க முடியாத காரணத்தினாலும் வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 1-இல் தற்காலிமாக நிறுத்தப்பட்ட 2 அலகுகளில் 1 அலகு மீண்டும் மின் உற்பத்தியை தொடங்கியது. இன்னொரு அலகானது தேவைப்படும் மின் பலுவை பொருத்து இயக்கத்திற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளது“ என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com