/

தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசியப் பத்திரிகை நாளையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :16 நவம்பர் 2021, 6:14 am

DIN

தேசியப் பத்திரிகை நாளையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் பத்திரிகை/ஊடகத்தில் பணியாற்றுபவர்களை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்தியப் பத்திரிக்கை சபை(The Press Council of India) தோற்றுவிக்கப்பட்ட நாளே (1966, நவ. 16) தேசிய பத்திரிகை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், 'துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன! நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.