வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 2 குழந்தைகளை கிணற்றில் போட்டு, தந்தையும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
முத்தூர் ஊடையம் துத்திகுளத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் ஜெகன் (29). இவருக்கும், கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, முடிக்கணம் பக்கமுள்ள காசிபாளையம் காலனியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணமாகி, ஜெகன் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்து ஆட்டு வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு நான்கு வயதான தேஜஸ்வி, இரண்டு வயதான சுவஸ்வி என 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
ஜெகனுக்கு தொழில் வகையில் சில பிரச்னைகளும், குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், மாமனார் வீட்டில் கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு புறப்பட்டு வந்துள்ளார். பின்னர் மூன்று பேரையும் காணாமல் தேடிய போது, ஜெகனின் சொந்த ஊர் துத்திக்குளம் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பெரியசாமி என்பவருடைய தோட்டத்து கிணற்றில் ஜெகனின் சடலம் மிதந்து கிடந்தது வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு தெரிய வந்தது.
தகவல் அறிந்து வெள்ளக்கோவில் தீயணைப்பு துறையினர் வந்து சடலத்தை மீட்டுத் தேடிய போது, அதே கிணற்றில் இரண்டு குழந்தைகள் சடலமும் கைப்பற்றப்பட்டன. பல்வேறு பிரச்னைகளால் மனமுடைந்த ஜெகன், தனது குழந்தைகளைக் கிணற்றில் வீசி தானும் தற்கொலை செய்து கொண்டதாக ஜெகனின் குடும்பத்தினர் கூறினா்.
இதுதொடர்பாக வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.