வேதாரண்யம்: கல்வித்துறை நடத்திய வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்று ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவனை பாராட்டி, நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி இன்று (நவ.23) நடைபெற்றது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வீரதீரன். கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றார்.
இதையடுத்து, தமிழக அரசால் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். நேரில் சென்ற மருதூர் ரோட்டரி சங்கத்தினர் சால்வைகள் அணிவித்து மாணவனை பாராட்டினர். குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு செலவுக்கு உதவியாக நிதியும் வழங்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செந்தில், இலக்குவன், அண்ணாதுரை, பிரண்ஜ் கோபால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


