வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையீடு: குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர்.


கடலூர்: கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நல்லூர் வட்டார விவசாயிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி பயிர்களுடன் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
இதையும் படிக்க | இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!
இதேபோல், குள்ளஞ்சாவடி சத்திரத்தில் வாரச் சந்தை நடைபெறும் இடத்தில் தனி நபர் ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதி விவசாயிகள் மொத்தமாக வந்திருந்து மனு அளித்தனர்.
மழை, வெள்ள சேதம் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும், உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.
இதையும் படிக்க | ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
மேலும், ஆக்கிரமிப்பு தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, விவசாயிகள் தங்களது பகுதி குறைகளை எடுத்துக் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...