ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரே வாரத்தில் 1,485 வழக்கு

சென்னையில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரு வாரத்தில் 1,485 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:34 pm

DIN

சென்னையில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது ஒரு வாரத்தில் 1,485 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. கரோனா முதல் அலையை காட்டிலும், இரண்டாவது அலையில் பாதிப்பும், இறப்பும் அதிகளவில் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தியது.

கரோனா பரவல் குறைவதால் பொதுமுடக்கம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் படிப்படியாக தளா்த்தப்பட்டது. பொதுமுடக்கத்தைக் கண்காணிக்கும் வகையில் சென்னையில் 12 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் கடந்த ஒரு வார காலத்தில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 1,485 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 491 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காத 24 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.