மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கெங்கவல்லி, தம்மம்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா  

 சேலம் மாவட்டம் ,கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினர்.   

News image
தம்மம்பட்டியில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோர்.
Updated On :27 நவம்பர் 2021, 6:07 am

DIN

தம்மம்பட்டி:  சேலம் மாவட்டம் ,கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினர்.   

கெங்கவல்லி பேரூராட்சியில் பேரூர் திமுக சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவிற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.கே. அகிலன் முன்னிலையில் கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன், 300 பேருக்கு அன்னதானம் வழங்கியதுடன்,  சாலையோரத்திலிருந்த 52 பேருக்கு போர்வைகளையும் வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரகாஷ், மற்றும் ராமசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். 

Story image

கெங்கவல்லியில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோர்.

தம்மம்பட்டி பேரூராட்சியில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா தம்மம்பட்டி பேருந்து நிலையம், தேவேந்திர தெரு உள்ளிட்ட இடங்களில் நகர திமுக செயலாளர் வி.பி.ஆர். இராஜா, ஏழைகள் 100 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கி, 400 பேருக்கு மேல் இனிப்புடன் அன்னதானம் வழங்கினார். 

இந்நிகழ்ச்சிகளில்  மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜசேகரன், ஏடி சி.கணேசன், அஸ்ரப், சதீஷ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் ரெனால்டு, பஸ் மேனேஜர் ரமேஷ், வினோத், ராஜா, பழனி ராஜன், டெல்லி ராஜகோபால், சையது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.