வாழப்பாடியில் உதயநிதி பிறந்தநாள் விழா: அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, வாழப்பாடி ஒன்றிய திமுக சார்பில் சனிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளர் எஸ். சி.சக்கரவர்த்தி தலைமை வகித்தார். வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம், புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
துக்கியாம்பாளையம் கமலாலயம் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளுக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.
இவ்விழாவில், திமுக நிர்வாகிகள் கோவிந்தன், ராயர், சரவணன், பிரபாகரன், குமார், உமாபதி, கருணாகரன், சிங்காரவேல், கதிரவன், ரமணி, ராஜவேல், பழனிசாமி, சகாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...