திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது: தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம்

தமிழகத்தில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

News image
தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் 
Updated On :4 அக்டோபர் 2021, 12:46 pm

DIN

தமிழகத்தில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படக் கூடாது என பொறியியல் கல்லூரிகளுக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம்  சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் நடப்பாண்டு 6,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் 4,920 மாணவர்கள் தனியார் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளனர். 

நடப்பு ஆண்டில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், அதுகுறித்த அரசாணை வெளியிடப்படாததால், தனியார் கல்லூரிகள், மாணவர்களிடம் கட்டணம் செலுத்த வலியுறுத்தின. 

இந்நிலையில், இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறப்பு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.