தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னையில் இயங்கி வந்த கார் உற்பத்தி தொழிற்சாலையான ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது ஃபோர்டு நிறுவனத்தை டாடா குழுமம் வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், டாடா குழுமத் தலைவர் முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார் நீதிபதிக்கு வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்!

5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா?

'திருச்சி குலுங்கட்டும்' - மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை: வீடு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வளவு..?
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

