கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேக்கடி ஏரியில் கரையை கடந்த யானை: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தேக்கடி ஏரியில் யானை கரையை கடந்து சென்ற அழகான காட்சியை பார்த்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

News image

வெள்ளிக்கிழமை தேக்கடி ஏரியில் நீந்திச் சென்ற தந்தம் வைத்த யானை.

Updated On :8 அக்டோபர் 2021, 5:43 am

DIN

கம்பம்: தேக்கடி ஏரியில் யானை கரையை கடந்து சென்ற அழகான காட்சியை பார்த்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

முல்லைப் பெரியாறு அணை தண்ணீரில் தேக்கடி ஏரி அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் டிரிப் படகு போக்குவரத்து சுற்றுலாப்பயணிகள் சென்றது. அப்போது இரண்டு பெரிய தந்தங்களுடன் பெரிய யானை ஒன்று, முல்லைப் பெரியாறு அணை அருகே  ஒரு கரையிலிருந்து  மறுகரைக்கு அழகாக நீந்திச் சென்றது.

இதைப்பார்த்த சுற்றுலா படகு ஓட்டுநர் சுற்றுலா பயணிகளுக்கு தெரிவித்தார், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் செல்லிடப்பேசியில் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து உற்சாகமடைந்தனர்.

மிகப்பெரிய உருவம் கொண்ட  யானை ஏரியில் மிக அழகாக நீந்தி மறுகரையில் ஏறிச் சென்றதை சுற்றுலா  பயணிகள் பார்த்து ரசித்தனர்.

யானை கரையேறி வனப்பகுதிக்குள் சென்றபின் சுற்றுலா படகு சென்றது இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.