திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நீட் தேர்வு தாக்கம்: ஏ.கே.ராஜன் அறிக்கை 7 மொழிகளில் மொழிபெயர்ப்பு

நீட் தேர்வு தாக்கம் குறித்த ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2021, 4:48 pm

DIN

நீட் தேர்வு தாக்கம் குறித்த ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக நீட் தோ்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ் அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. 

இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதுடன், பொதுமக்களிடம் இருந்தும் கருத்துகளைக் கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து இருந்தனா். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நீதிபதி ராஜன் குழு சமா்ப்பித்தது. இதற்கிடையே, சட்டப் பேரவையில் நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவை நிறைவேற்றி, அதனை ஆளுநா் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. 

மேலும் நீட் பாதிப்பு தொடா்பாக 12 மாநில முதல்வா்களுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அண்மையில் கடிதமும் எழுதியுள்ளார். இந்த நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்த ஏ.கே.ராஜனின் அறிக்கை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி என 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 7 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கையை மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல்வர் ஸ்டாலினிடம் இன்று வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.