மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,665 கன அடியாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.67 அடியிலிருந்து 79.07 அடியாக உயர்ந்தது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,665 கன அடியாக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 77.67 அடியிலிருந்து 79.07 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,019 கன அடியிலிருந்து 17,665 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 41.63டி எம் சி யாக இருந்தது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...