கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறு காரணமாக முத்துராமனிடம் விட்டு பிரிந்து முத்துமாரி மற்றும் அவரது மகள்கள் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலையில் முத்துமாரியின் தாய் கோமதி வீட்டுக்கு சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. இதையெடுத்து கதவை உடைத்து பார்த்தபோது வீட்டினுள்ளே முத்துமாரி, அவரது மகள்கள் யுவராணி, நித்யா ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையெடுத்து மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
காவலர்கள் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினை தொடர்பாக முத்துமாரி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அவரும் அவரது மகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்து பிரச்சினை காரணமா அல்லது வேறு எதுவும் காரணமா ? மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.