சரஸ்வதி பூஜை: சேலத்தில் ஆலயங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
சரஸ்வதி பூஜையை ஒட்டி சேலத்தில் உள்ள ஆலயங்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எழுத பயிற்சி கொடுத்தனர்.

சரஸ்வதி பூஜையை ஒட்டி சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள ஸ்ரீ சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் திரளான பெற்றோர் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.







