எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மானாமதுரை அருகே கால்வாய் வெட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

மானாமதுரை அருகே பாசன கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை வெட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.

News image
மானாமதுரை ஒன்றியம் நல்லாண்டிபுரம் கிராமத்தில் விதிமுறைகளை மீறி தனியார் பட்டா நிலத்தில் வெட்டப்பட்ட வரத்துக் கால்வாய்
Updated On :17 அக்டோபர் 2021, 11:02 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பாசன கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாயை வெட்டுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கணபதியேந்தல் கிராமம், இக்கிராமத்திற்கான பாசன கண்மாய்க்கு மழைத் தண்ணீர் செல்வதற்காக அருகே உள்ள நல்லாண்டிபுரம் கிராமத்தில் சில குடியிருப்புகள் அமைந்த பகுதியில் முறையான அனுமதி இல்லாமல் தனியார் பட்டா நிலத்தில் விதிமுறைகளை மீறி கால்வாய் வெட்டப்பட்டுள்ளது.

இந்த கால்வாய் வெட்டப்பட்டதன் மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கால்வாயைக் கடந்து சாலைக்கு வர முடியாத நிலை உள்ளது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், மேற்கண்ட கால்வாய் வெட்டுவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறவில்லை என நல்லாண்டிபுரம் கிராமப்புற மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து தொடர்ந்து கால்வாய் வெட்டுவதற்கும் வெட்டிய கால்வாயை மூட வேண்டும் எனக் கோரியும் நல்லாண்டிபுரம் கிராம மக்கள் மானாமதுரை வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்டோரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.