அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உள்ளாட்சித் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிடில் தகுதிநீக்கம்: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்

News image
மாநில தேர்தல் ஆணையம்
Updated On :18 அக்டோபர் 2021, 11:07 am

DIN

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருநெல்வேலி, மற்றும்‌ தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்‌ நடைபெற்ற ஊரக உள்ளாட்சி சாதாரணத்‌ தேர்தல்கள்‌ 2021 மற்றும்‌ 28 மாவட்டங்களில்‌ நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தற்செயல்‌ தேர்தல்களில்‌ போட்டிமிட்ட வேட்பாளர்கள்‌, தேர்தலில்‌ செலலிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில்‌ பராமரிக்க வேண்டும்‌ என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கின்‌ உண்மை நகலினை, தேர்தல்‌ முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து முப்பது நாள்களுக்குள்‌ மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ தேர்தலில்‌ போட்டியிட்ட வேட்பாளர்கள்‌ மாவட்ட ஊராட்சி செயலரிடமும்‌, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்‌ தேர்தலில்‌ போட்டியிட்ட
வேட்பாளர்கள்‌ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும்‌, கிராம ஊராட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்ரு உறுப்பினர்‌ தேர்தலில்‌ போட்டியிட்ட வேட்பாளர்கள்‌ தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்‌ (வட்டார ஊராட்சி) / ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம்‌ தாக்கல்‌ செய்ய வேண்டும்‌. போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கஞும்‌ தேர்தல்‌ செலவு கணக்கு விவரத்தினை உரிய அலுவலரிடம்‌ தாக்கல்‌ செய்ய வேண்டும்‌. தேர்தல்‌ செலவு
கணக்குத்‌ தாக்கல்‌ செய்தமைக்கான ஒப்புதலை தொடர்புடைய அலுவலரிடமிருந்து, வேட்பாளர்கள்‌ பெற்றுக்‌ கொள்ள வேண்டும்‌.

தேர்தல்‌ செலவு கணக்கு தாக்கல்‌ செய்யாத வேட்பாளர்கள்‌ மீது தமிழ்நாடு ஊராட்சிகள்‌ சட்டம்‌, 1994, பிரிவு 37(4)ன்படி தக்க நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு, வருங்காலங்களில்‌ முன்று ஆண்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல்களில்‌ போட்டியிட தகுதியற்றவர்கள்‌ ஆக்கப்படுவார்கள்‌ என தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.