பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாழப்பாடி அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஓமலூரில் இருந்து அரியலூருக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
தீப்பற்றிய செங்கல் லாரி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்.
Updated On :20 அக்டோபர் 2021, 6:27 am

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே ஓமலூரில் இருந்து அரியலூருக்கு செங்கல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓமலூர் அருகிலுள்ள மோட்டூரில் இருந்து செங்கல் ஏற்றிய லாரியை, திருவாரூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (30) என்பவர், வாழப்பாடி வழியாக அரியலூர் நோக்கி இன்று புதன்கிழமை காலை ஓட்டிச் சென்றார்.

Story image

தீப்பற்றிய செங்கல் லாரி

இந்த லாரி, சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சூடாக இருந்த செங்கற்கள் உரசியதில் லாரியின் அடிபாகத்தில் தீப்பற்றிக் கொண்டது.

லாரி தீப்பற்றி கொண்டதை அறிந்த லாரி ஓட்டுநர், இதுகுறித்து வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் வையாபுரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து லாரியை மீட்டனர். சூடாக இருந்த செங்கற்களையும் தண்ணீர் பீய்சி அடித்து ஆற வைத்தனர்.

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம், பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டுநர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.