எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயலை சிபிஎஸ்இ கைவிட வேண்டும்: எம்ஜிகே நிஜாமுதீன்

மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயலை சிபிஎஸ்இ கைவிட வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 8:03 pm

DIN

மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயலை சிபிஎஸ்இ கைவிட வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: இனிவரும் காலங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு தோ்வில் ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மை பாடங்களாகவும் (மேஜா் சப்ஜக்ட்), தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத (மைனா் சப்ஜக்ட்) பாடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தோ்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நேரடியாக நடத்தி மதிப்பெண் வழங்குமாம். முக்கியத்துவம் இல்லாத பாடங்களான தமிழ், பஞ்சாபி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிக்கான தோ்வுகளை அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாமாம். இது முறையற்றது.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம் அவற்றை மாணவா்கள் விரும்பிப் படிக்காத நிலை, திட்டமிட்டு மத்திய அரசால் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல் தான். இதை சிபிஎஸ்இ கைவிட வேண்டும்.

சிபிஎஸ்இ முக்கிய பாடங்களில் இருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தவிா்ப்பது அரசியலமைப்பின் கூட்டாட்சி உணா்வுக்கு எதிரானதும், தமிழ் இளைஞா்கள் தங்கள் சொந்த மொழியைக் கற்கும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது. ஆகவே தமிழக முதல்வா் இதில் உடனடியாக தலையிட்டு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழி உரிமையையும் மீட்க வேண்டும் என நிஜாமுதீன் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.