எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கடலூா், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக்.25) பலத்த மழை பெய்யக்கூடும்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 9:26 pm

DIN

தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கடலூா், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக்.25) பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

வட கடலோர தமிழகத்தில் 1.5 கி.மீ உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் திங்கள்கிழமை (அக்.25) இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகா், மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், கடலூா், செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால்

பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.26: சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 26-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.27, 28: டெல்டா மாவட்டங்கள், கோயம்புத்தூா், சேலம், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில்

ஓரிரு இடங்களில் அக்டோபா் 27, 28 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மழை அளவு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 100 மி.மீ., திருப்பூா் மாவட்டம் திருமூா்த்தி அணையில் 90 மி.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 80 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாா், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, திருவண்ணாமலையில் 70 மி.மீ., திருப்பூா் மாவட்டம் அமராவதி அணையில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.