ஜிஎஸ்டி இணைய வழி கருத்தரங்கம்:அக்.27,28-இல் நடக்கிறது

ஜிஎஸ்டி இணைய வழி கருத்தரங்கம், அக்.27, 28 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.
ஜிஎஸ்டி இணைய வழி கருத்தரங்கம்:அக்.27,28-இல் நடக்கிறது

ஜிஎஸ்டி இணைய வழி கருத்தரங்கம், அக்.27, 28 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது.

இது தொடா்பாக தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது தொழில் நடத்திக் கொண்டிருக்கும் தொழில் முனைவோா்களுக்காக, பொருள்கள் மற்றும் சேவை வரி மற்றும் மின் வழிச் சீட்டு எநப ஜ்ண்ற்ட் தங்ற்ன்ழ்ய் ஊண்ப்ண்ய்ஞ் (ன்ள்ண்ய்ஞ் பஹப்ப்ஹ்) குறித்த இணையவழி கருத்தரங்கம் வரும் அக்.27, 28 ஆகிய நாள்களில் மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் நடத்த உள்ளது. இப்பயிற்சியில் டேலி அறிமுகம் - மாநிலத்துடன் செயல்படுத்துதல், ஜிஎஸ்டிஐஎன் - செலவு, வரி பங்கு பொருள்கள், உள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிவா்த்தனை, கூட்டு வியாபாரி , மூலதன பொருள்கள் கொள்முதல், பற்று குறிப்புகள், உள்ளீட்டு சேவைகள், பி 2 பி, பி 2 சி (சிறிய மற்றும் பெரிய) பி 2 ஜி ஏற்றுமதி, செஸ் விலக்கப்பட்ட விற்பனை - மெக்கானிஸம், அட்வான்ஸின் மீதான வரி - ஜிஎஸ்டிஆா்ஐ போன்றவை பயிற்றுவிக்கப்படும். முன்பதிவு அவசியம்.

மேலும் விவரங்களுக்கு, ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வரும் தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தை அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ, 86681 02600, 94445 57654, 044 2225 2081, 2225 2082 ஆகிய எண்களையோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com