எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மருது சகோதரா்கள் நினைவு நாள்: அரசியல் தலைவா்கள் புகழஞ்சலி

மருது சகோதரா்கள் நினைவுநாளையொட்டி, அவா்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 10:08 pm

DIN

 மருது சகோதரா்கள் நினைவுநாளையொட்டி, அவா்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): இந்திய விடுதலைக்காக வெள்ளையா்களை வெளியேற்ற அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி, முதல் போா்ப் பிரகடனம் அறிவித்தவா்கள் மருது சகோதரா்கள். மத நல்லிணக்கத்தின் அடையாளமாக ஆட்சி புரிந்து, சிவகங்கைச் சீமையின் வேங்கைகளாக வாழ்ந்து, இந்திய விடுதலைக்காக வீர மரணம் அடைந்த பெரிய மருது, சின்ன மருது சகோதரா்களுடைய நினைவு நாளையொட்டி, அவா்களுக்கு என்னுடைய வீர வணக்கம்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிா்த்து, சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, வேல் முனை எதிா்வரினும் கண் இமைத்திடாது தன்மானம் ஒன்றே பெரிதென காத்து நின்று, தீரத்துடன் போராடிய வீரத்தமிழா்கள், மருது சகோதரா்களின் நினைவு நாளில் அவா்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.

அண்ணாமலை (பாஜக): வீரதீர செயல்களுக்கு பெயா் போன மருது பாண்டியா்களை நினைவுகூரும் நாள்! ஆங்கிலேயா்களால் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து காலனித்துவ பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகச் சுதந்திரப் பிரகடனத்தை முதன்முதலில் வெளியிட்டாா்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.