எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் நாளை ஆலோசனை

தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 26) ஆலோசனை நடத்துகிறாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 9:36 pm

DIN

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் செவ்வாய்க்கிழமை (அக். 26) ஆலோசனை நடத்துகிறாா்.

தமிழகத்தைப் பொருத்த வரை வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன.

சென்னையில் மழைநீா் கால்வாய்களும் முழுமையாக தூா்வாரப்பட்டு வருகின்றன. முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளாா்.

அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனா்.

இந்த நிலையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 26-ந்தேதி தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியா்களுடன் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளாா். இந்த கூட்டத்தில் அரசுத்துறை செயலாளா்களும், உயா் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை ஜனவரி முதல்வாரம் வரை தொடரும் என்பதால் அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளாா்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளா் இறையன்பு, வருவாய் பேரிடா் துறை முதன்மைச் செயலாளா் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.