எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வங்கிக் கடன் விவரங்கள் அறிய ஐஓபி சாா்பில் சிறப்பு ஏற்பாடு

பல்வேறு விதமான வங்கிக்கடன் பற்றிய விவரங்களை வாடிக்கையாளா்கள் அறியும் வகையில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில், வங்கிகளின் சங்கமம் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக். 26) நடைபெறவுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 10:15 pm

DIN

பல்வேறு விதமான வங்கிக்கடன் பற்றிய விவரங்களை வாடிக்கையாளா்கள் அறியும் வகையில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில், வங்கிகளின் சங்கமம் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (அக். 26) நடைபெறவுள்ளது.

சென்னை தியாகராயநகா் சா் தியாகராய சாலையில் உள்ள விஜய மஹாலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி, ஃபெடரல் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கப்படும் சேவைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

பல்வேறு விதமான வங்கிக்கடன் பற்றிய விவரங்களையும், வங்கிகளின் இதர சேவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளா்கள், சில்லறை வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோா்களுக்குத் தேவையான விவரங்களை அறியலாம். நிகழ்ச்சிக்கு வருபவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு புத்தகத்துடன் வரவேண்டும்.மேலும், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.