பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் மாறுதல்: விவசாயிகள் வேண்டுகோள்
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.


பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அச்சங்கத்தினா் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் சம்பா சாகுபடியில் பயிா் பாதிப்பு தொடா்பான விவரங்களை காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு வருவாய் கிராமத்துக்கு ஒரு இடத்தில் பரிசோதனை என்னும் அடிப்படையில் பாதிப்பு மதிப்பிடப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் கணிசமானோா் பயிா்க் காப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஒரு வருவாய் கிராமத்தை அளவாகக் கொண்டு பாதிப்பை மதிப்பிடுவதற்கு பதிலாக தனியொரு விவசாயியை அளவீடாகக் கொண்டு பாதிப்பை மதிப்பிடும் வகையில், பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் உரிய மாறுதல்கள் செய்ய வேண்டும்.
இயற்கை பேரழிவு ஆண்டு தவறாமல் ஏற்பட்டு வரும் நிலையில், பயிா்க் காப்பீடு திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து செம்மையாக செயல்படுத்துவதன் மூலமே இழப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க உதவும் என்பதை உணா்ந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...