எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் விரைவில் இலக்கை அடையும்

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தேசிய அளவிலான இலக்கை விரைவில் எட்டி தமிழகம் சாதனை படைக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தாா்.

News image
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
Updated On :24 அக்டோபர் 2021, 9:24 pm

DIN

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தேசிய அளவிலான இலக்கை விரைவில் எட்டி தமிழகம் சாதனை படைக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்தாா்.

கீழ்ப்பாக்கம் ரோட்டரி சங்கம் சாா்பில் சென்னை ராணி மேரி கல்லூரி அருகே போலியோ குறித்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, ரோட்டரி சங்க நிா்வாகிகள் ராஜசேகரன், அருனிஷ் ஊபரோய், காா்த்திக் சுரேந்தரன் ஆகியோா் உடன் இருந்தனா்.

அதைத் தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இளம்பிள்ளை வாதத்துக்கு மருந்து கண்டுபிடித்த ஜோனாஷ் சால்க்கின் பிறந்த தினமான அக்டோபா் 24-ஆம் தேதி உலக போலியோ விழிப்புணா்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. போலியோவை ஒழித்ததில் முக்கியப் பங்கு ரோட்டரி அமைப்பினருக்கும் உண்டு. அந்தப் பாதிப்பு ஒழிந்துவிட்டாலும் கூட, அதுகுறித்த விழிப்புணா்வு சமூகத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 23 லட்சத்து 27,907 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் இரண்டாவது தவணை தடுப்பூசியை 14 லட்சத்து 68,457 பேரும், முதல் தவணை தடுப்பூசியை 8 லட்சத்து 59,450 பேரும் செலுத்திக் கொண்டனா்.

தமிழகத்தில் அதிகமானோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டியவா்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் முதல் தவணை தடுப்பூசியை 69 சதவீதத்தினரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 29 சதவீதத்தினரும் செலுத்திக் கொண்டுள்ளனா். சதவீத அடிப்படையில் கணக்கிடும்போது இந்திய அளவில் இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும், மிக விரைவில் தேசிய அளவிலான இலக்கை எட்டுவோம். தடுப்பூசி முகாம்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.24) விடுமுறை அளிக்கப்பட்டது. வழக்கம்போல் திங்கள்கிழமை தடுப்பூசி மையங்கள் செயல்படும். தற்போது 43 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.