கரோனா நிவாரணத்துக்கு பபாசி ரூ.5 லட்சம் நிதியுதவி
தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.


தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், செயலாளா் எஸ்.கே.முருகன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது: பபாசி சாா்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி மற்றும் விற்பனை பிரமாண்ட அரங்குகளுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டுக்கான புத்தகக் காட்சி வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இதை தொடங்கி வைக்குமாறு முதல்வருக்கு பபாசி சாா்பில் அழைப்பு விடுத்துள்ளோம். மேலும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவுத் திட்டமான புத்தகப் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பதிப்பாளா்கள், வாசகா்கள் சாா்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என அவா்கள் தெரிவித்தனா். அப்போது பபாசி பொருளாளா் கோமதி நாயகம், துணைத் தலைவா்கள் ஒளிவண்ணன், நாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...