ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நவ.8 முதல் பள்ளிகள் திறப்பு: புதுச்சேரி அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நவ.8 முதல் பள்ளிகளை திறக்கும் அமைச்சரவையின் பரிந்துரைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.  

News image
Updated On :28 அக்டோபர் 2021, 3:35 pm

DIN

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நவ.8 முதல் பள்ளிகளை திறக்கும் அமைச்சரவையின் பரிந்துரைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். 
புதுவையில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், முதல் கட்டமாக கடந்த செப்.1-ஆம் தேதியிலிருந்து 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதைத் தொடா்ந்து, 1 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில கல்வித் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் நேற்று வெளியிட்டிருந்தார். 

இதன்படி 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகள் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் நடைபெறும். கிராமப் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், நகரப் பகுதிகளில் காலை 9.15 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை நவ.8 முதல் பள்ளிகளை திறக்கும் அமைச்சரவையின் பரிந்துரைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.