நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று(அக்.28) அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனை தரப்பில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தலைச்சுற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் இருந்த அடைப்பு நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு மருத்துவர்கள் குழு அவரை கண்காணித்து வருகிறது. சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தேறி வருகிறது. சிகிச்சை முடிந்து சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...