அவரை தப்பிக்க வைத்துள்ளார்: சொகுசு கப்பல் விவகாரத்தில் என்சிபி அதிகாரி மீது அமைச்சர் குற்றச்சாட்டு

காஷிப் கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். 
நவாப் மாலிக் (கோப்புப்படம்)
நவாப் மாலிக் (கோப்புப்படம்)

மும்பை சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்தை ஏற்பட செய்த ஃபேஷன் டிவியின் மூத்த நிர்வாகி காஷிப் கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய போதை தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர் சமீர் வாங்கடேவின் நண்பர் காஷிப் கான் என்பதால் அவர் கானை தப்பிக்கை வைத்துள்ளார் என்றும் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அவர், "ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு, அப்பாவி இளைஞரைக் கைது செய்த ஒரு நபர் (கிரண் கோசாவி) இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சோதனைக்கு தலைமை தாங்கிய மற்றொரு நபர் (சமீர் வான்கடே) இப்போது மும்பை காவல்துறையால் விசாரிக்கப்பட்ட வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏவுக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறார்.

ஒரு மாத காலத்தில் நிலைமை முழுவதும் மாறிவிட்டது. வான்கடே கைது செய்யப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என மும்பை போலீசார் உறுதி அளித்துள்ளனர். வாங்கடேவின் தாயாரை ஒரு போதும் தனிப்பட்ட ரீதியாக விமர்சித்ததில்லை. வாங்கடேவின் தாய் மற்றும் மனைவி மீது மிகப் பெரிய மதிப்பு உள்ளது" என்றார்.

ஆர்யன் கான் அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 2ஆம் தேதி கோவாவுக்குச் சென்று கொண்டிருந்த கோர்டேலியா சொகுசு கப்பல் கேளிக்கை விருந்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com