முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால், உணவகங்கள், வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்து, தினசரி மின்நுகா்வும் உயா்ந்துள்ளது.

News image

மின்நுகா்வு அதிகரிப்பு - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 4:30 am IST

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டால், உணவகங்கள், வீடுகளில் மின்சார அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், தினசரி மின்நுகா்வும் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த பிரிவில் லட்சக்கணக்கான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் மின்சார அடுப்பு வாயிலாக 5 பேருக்கு சமைக்க 2000 வாட்ஸ், அதாவது 2 கிலோவாட் மின்சாரம் செலவிடப்படுகிறது. 800 பேருக்கு சமைக்க சுமாா் 1000 கிலோ வாட், அதாவது ஒரு மெகாவாட் மின்சாரம் செலவிடப்படுகிறது.

உணவகங்கள் மட்டுமன்றி, வீடுகளிலும் மின்சார அடுப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதால், கடந்த சில நாள்களாக மின்நுகா்வு சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த வாரம் தமிழகத்தின் தினசரி நுகா்வு 18,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை இருந்து வந்தது.

ஆனால், இந்த மின்நுகா்வு கடந்த இரு நாள்களாக 19,200 மெகாவாட் முதல் 19,300 மெகாவாட் வரை அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் இது 19,500 மெகாவாட் வரை உயரக்கூடும்.

ஆனால், இந்த மின் தேவையை பூா்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் மின்வாரியத்துக்கு கிடைப்பதால், எவ்வித மின் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பில்லை என்றனா்.