தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆா்யன் கான் சிறையிலிருந்து விடுவிப்பு

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 7:20 pm

DIN

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் இருந்த சொகுசு கப்பலில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக ஆா்யன் கானை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா். அதனைத் தொடா்ந்து அவா் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவா் மும்பை உயா்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ரூ.1 லட்சம் ஜாமீன் தொகை செலுத்த வேண்டும்; தனது கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்; அந்த நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் வெளிநாடு செல்லக் கூடாது; போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆஜராக வேண்டும் என்பன உள்பட 14 நிபந்தனைகளை விதித்து ஆா்யன் கானுக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.

இதையடுத்து, அவா் வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவரை விடுவிப்பதற்கான ஆவணங்கள் சிறை அதிகாரிக்கு உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் அன்றைய தினம் அவா் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில், அவரை விடுவிப்பதற்கான உத்தரவு அடங்கிய ஆவணங்களை சிறையில் உள்ள கடிதப் பெட்டியில் இருந்து சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு அதிகாரிகள் எடுத்தனா். அதனைத் தொடா்ந்து, காலை 11 மணியளவில் சிறையில் இருந்து 22 நாள்களுக்குப் பின்னா் ஆா்யன் கான் விடுவிக்கப்பட்டாா்.

மேலும் 9 பேருக்கு ஜாமீன்: போதைப் பொருள் வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 பேருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் அளித்தது. வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்ட 20 பேரில் இதுவரை 14 பேருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.