எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

2 மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களில் மின்தூக்கி கட்டாயம்

தமிழகத்தில் இனி, புதிதாகக் கட்டப்படும் 2 மாடிகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களில் கட்டாயம் மின்தூக்கி வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
elevators
Updated On :1 செப்டம்பர் 2021, 11:02 am

DIN


சென்னை: தமிழகத்தில் இனி, புதிதாகக் கட்டப்படும் 2 மாடிகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களில் கட்டாயம் மின்தூக்கி வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக, இனிமேல், 2 மாடிகளுக்கு மேல் புதிதாகக் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களில் கட்டாயம் மின்தூக்கி வசதி இருக்க வேண்டும்.

மேலும், சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் செய்ய வேண்டும்.  பார்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகை, தனி வாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்பட வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.