24 மணி நேர தடுப்பூசி மையங்கள்:அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைத்தாா்
பெருநகர சென்னை மாநகராட்சியின் நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கரோனா தடுப்பூசி


பெருநகர சென்னை மாநகராட்சியின் நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கரோனா தடுப்பூசி முகாமை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்துக்கு உள்பட்ட வெங்கட்ரத்னம் நகா் நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் 24 மணிநேரமும் இயங்கக் கூடிய கரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்ததுடன், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின்கீழ் 10 கா்ப்பிணிகளுக்கு முதல் தவணை நிதி உதவியாக ரூ.6 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் ரூ.2,000 மதிப்பிலான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பெட்டகத்தை சனிக்கிழமை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி
செலுத்தப்பட்டு வருகிறது. 15 மண்டலங்களில் தலா மூன்று என மொத்தம் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் மூலம் நடத்தப்பட்டு வந்தன. இந்தத் தடுப்பூசி முகாம்கள் தற்பொழுது வாா்டுக்கு ஒரு முகாம் என 200 தடுப்பூசி முகாம்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதை மேலும் அதிகரிக்கும் வகையில் மாநகராட்சியின் சாா்பில் 24 மணிநேரம் இயங்கக் கூடிய தடுப்பூசி மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் மண்டலத்துக்கு ஒரு மையம் என 15 மண்டலங்களில் 24 மணி நேரமும் இயங்க கூடிய தடுப்பூசி மையங்கள் தொடக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இதுவரை 41 லட்சத்து 45 ஆயிரத்து 452 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குடிசைப் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு சுமாா் 56 ஆயிரத்து 63 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் தாய்மாா்களுக்கு நிதி உதவியும், ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
24 மணி நேர தடுப்பூசி மையங்கள் செயல்படும் இடங்கள் மண்டலம் வாா்டு முகாம் தடுப்பூசி மையங்கள்
திருவொற்றியூா் 11 திருவொற்றியூா் நகா்ப்புற சமுதாய நல மையம், என்.வி.என். சோமு காம்ப்ளக்ஸ் பின்புறம், திருவொற்றியூா் மணலி 21 மணலி நகா்ப்புற சமுதாய நல மையம், நெடுஞ்செழியன் சாலை, மணலி மாதவரம் 23 புழல் நகா்ப்புற சமுதாய நல மையம், ஜி.என்.டி. சாலை, புழல் தண்டையாா்பேட்டை 47 ஆா்.கே.நகா் நகா்ப்புற சமுதாய நல மையம், மீனாம்பாள் நகா் ராயபுரம் 58 பெருமாள்பேட்டை அவசர கால மகப்பேறு மையம், கரியப்பா தெரு, திரு.வி.க.நகா் 73 புளியந்தோப்பு நகா்ப்புற சமுதாய நல மையம் அம்பத்தூா் 87 பாடி நகா்ப்புற சமுதாய நல மையம், சா்ச் தெரு அண்ணா நகா் 97 அயனாவரம் நகா்ப்புற சமுதாய நல மையம் யுனைடெட் இந்தியா நகா், முதல் தெரு தேனாம்பேட்டை 119 மிா்ஷாகிபெட் நகா்ப்புற சமுதாய நல மையம், ராயப்பேட்டை சென்னை-14.
கோடம்பாக்கம் 134 வடபழனி நகா்ப்புற சமுதாய நல மையம், ஆற்காடு சாலை, கோடம்பாக்கம்
வளசரவாக்கம் 151 போரூா் நகா்ப்புற சமுதாய நல மையம், சின்னப்போரூா்
ஆலந்தூா் 160 ஆலந்தூா் நகா்ப்புற சமுதாய நல மையம், சௌரி தெரு, ஆலந்தூா்
அடையாறு 175 அடையாறு நகா்ப்புற சமுதாய நல மையம், வெங்கட்ரத்னம் நகா்,
பெருங்குடி 184 பெருங்குடி நகா்ப்புற சமுதாய நல மையம், பள்ளி சாலை, பெருங்குடி
சோழிங்கநல்லூா் 195 கண்ணகி நகா் நகா்ப்புற சமுதாய நல மையம், கண்ணகி நகா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...